undefined

 பாலியல் புகார்கள்: ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு!

 
 


தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் புகார்கள் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த அன்னராஜ் (37), முனியசாமி என்ற இக்பால் (37) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தூத்துக்குடியைச் சேர்ந்த வேல்முருகன் (21) என்ற ஆட்டோ டிரைவர், உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த பிரவீன் (22) என்பவர் 17 வயது பள்ளி மாணவியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், தகவலறிந்த சமூகநலத் துறை அதிகாரிகள் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார்களின் பேரில், அன்னராஜ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!