அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாது.. டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.. சுந்தர் பிச்சை காட்டம்!
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில், பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் டொனால்ட் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்பைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் அமைத்தனர்.
டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது எக்ஸ் இணையதளத்தில், "அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இன்றைய துப்பாக்கிச்சூடு மற்றும் உயிரிழப்புகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, நாம் அனைவரும் ஒன்று கூடி கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!