ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாட்கள் ஆப்பிரிக்கா பயணம்... வளர்ச்சி கூட்டாண்மைக்கு புதிய ஒத்துழைப்பு முயற்சி!
இந்தியா–ஆப்பிரிக்க நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆறு நாள் அரசு முறை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தலைவர் இந்நாடுகளுக்கு வருகை தருவது இது முதன்முறை என்பதால் இருநாட்டு உறவில் இது முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி முர்மு நாளை புறப்பட்டு 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை அங்கோலாவில் தங்க உள்ளார். அங்கு அரசு நிர்வாக உயரதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் இந்தியர்களுடன் சந்திப்பில் ஈடுபடுகிறார். அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து 13ம் தேதி முதல் போட்ஸ்வானா செல்லும் அவருக்கு, அந்நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான கல்வி, ஆற்றல், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பயணம் மூலம் ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் தொடர்பு மேலும் உறுதியாகும் என தூதரகம் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க