பரபரப்பு...  பிக்பாஸுக்கு எதிராக போராட்டம்... போலீசார் குவிப்பு! 

 
 

இந்தியாவின் பல மாநிலங்களில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையை கிளப்பி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சீசன்–9 இல் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், நிகழ்ச்சியின் சில காட்சிகள் குடும்பத்துடன் பார்க்க முடியாததாகவும், சமூக நெறிமுறைகளை மீறுவதாகவும் சமூக வலைதளங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “பிக் பாஸ் நிகழ்ச்சி இளைய தலைமுறையின் மனநிலையை பாதிக்கிறது; சிலரின் தனியுரிமை மற்றும் உணர்வுகளை பொது வெளியில் வெளிப்படுத்துவது சமூக நாகரிகத்துக்கு எதிரானது” எனக் கண்டனம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் மகளிர் அணி இன்று சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்தி, “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்” என கோரினர்.

போராட்டம் தீவிரமடைந்ததால், காவல்துறை 100க்கும் மேற்பட்ட போலீசர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி நிர்வாகம் “நிகழ்ச்சி விதிமுறைகளுக்குள் தான் நடைபெறுகிறது” என விளக்கம் அளித்துள்ளது. எனினும், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு–ஆதரவு மோதல் நீடித்து வருவதால், பிக் பாஸ் விவகாரம் மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!