என்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் கொடுமை... 6 மாணவர்கள் கைது!
ஜார்கண்ட் மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் சீனியார் மாணவர்கள், ஜூனியர் மாணவரை ராகிங் கொடுமை செய்தது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டம் முருபண்டா கிராமத்தில் ராம்கார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பொகாரோ மாவட்டத்தின் புஸ்ரோ பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், பி.டெக் கணினி பிரிவில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவரை மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்தும், அடித்தும், கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து அக்கல்லூரியின் துணை முதல்வர் நஜ்மல் இஸ்லாம் கூறும்போது, அந்த மாணவன் ஆன்லைன் வழியே தேசிய ராகிங் ஒழிப்பு பிரிவில் புகார் அளித்து இருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் 2ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர் சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் என்றார். இது பற்றி ராம்கார் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரெண்டு அஜய் குமார் கூறும்போது, கல்லூரி வளாகத்தில் நடக்க கூடிய ராகிங்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராகிங்கில் ஈடுபட்ட மூத்த மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரியின் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!