undefined

 அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்... ராகுல் காந்தி உருக்கம்! 

 


 இன்று ஆகஸ்ட் 20ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்.  ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.  


இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில்,

"இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது. அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம்  மலர்தூவி மரியாதை செலுத்தினர். பீகாரில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தியால், இந்நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?