பெற்றோர்களே உஷார்... 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரயில்வே வாரியம் புதிய கட்டுப்பாடு!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் நெருங்குவதையடுத்து சுற்றுலா திட்டங்கள் வேகமெடுத்து வருகின்றன. பள்ளிகள் மூடப்பட, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ரயில் மூலம் பயணம் செய்ய முனைந்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கான டிக்கெட் விதிகள் குறித்து பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது.
இந்திய ரயில்வே விதிகளின்படி, 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் அவசியமில்லை — அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம். ஆனால், இவர்கள் தனியாகப் படுக்கை அல்லது இருக்கை கோர முடியாது. பெற்றோர்கள் விரும்பினால், குழந்தைக்குத் தனி இடம் வழங்கி கொள்ளலாம்; ஆனால் அதற்காக முழு வயது வந்தோருக்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.
5 முதல் 12 வயதுக்குள் உள்ளவர்கள், இடம் வேண்டுமா வேண்டாமா என்பதைப் பொறுத்தே கட்டணம் மாறும். 12 வயது மேல் இருப்பவர்கள் பெரியவர்களாகவே கருதப்படுவார்கள். எனவே, விடுமுறைப் பயணத்திற்குத் தயாராகும் பெற்றோர்கள், குழந்தைகளின் வயதையும் இடத் தேவையையும் முன்கூட்டியே பரிசீலித்து முன்பதிவு செய்தால் — பணம், நேரம் இரண்டும் மிச்சமாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க