undefined

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்தநாள்... அரசு சார்பில் மரியாதை! 

 


 
சாகித்திய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இன்று அவரது 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவரைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள அவரது நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  அத்துடன் கி. ராஜநாராயணனின் மகன்களான திவாகர், பிரபாகர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் நினைவரங்கத்தை பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ரத்தினகுமார், நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் என். ஆர். கே. என்ற ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் முருகேசன், கி.ராதாகிருஷ்ணன், அயலக அணி துணை அமைப்பாளர் சுப்புராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?