நடிகர் சரத்பாபு உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி... இன்று சென்னையில் இறுதி ஊர்வலம்!

 

சென்னையில் ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சரத்பாபு, சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமான நிலையில், நேற்று இரவு ஹைதராபாத்தில் ரசிகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.  நேற்றிரவு சென்னைக்கு அவரது உடல் ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக  புறப்பட்டு இன்று காலை முதல் நடிகர் சரத்பாபுவின் தி.நகர் இல்லத்தில் ரசிகர்கள், திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நடிகர் சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் நடைப்பெறுகிறது.

நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி.பி., நடிகர் மயில்சாமி, இயக்குநர்  மனோபாலா என அடுத்தடுத்து திரையுலகின் ஜாம்பவான்கள் மறைந்து வருகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நடிகர் சரத்பாபுவின் மறைவு திரையுலகினரைத் துவள செய்துள்ளது.

1973ல் தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்பாபு.  70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி  என முண்ணனி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்து வெற்றிப்படங்களைத் தந்திருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இன்று வரையில் இருந்து வருகிறார் நடிகர் சரத் பாபு. ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் சரத் பாபு, தற்போது வயோதிகம் காரணமாக, நடிப்பிலிருந்து விலகி ஹைதராபாத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 24 ம் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த  நடிகர் சரத்பாபுவுக்கு செப்சிஸ் நோய் காரணமாக சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 71. 

மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன நடிகர் சரத் பாபு, அதன் பின்னர் சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிழல் பார்க்கிரது, வட்டத்துக்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் நடித்து கலக்கி உள்ளார். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றாலே தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சரத் பாபுவை தான் அழைப்பார்கள் என்ற நிலை அப்போது இருந்தது.  தமிழில் கடைசியாக பாபிசிம்ஹா நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்து இருந்தார். மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார்.

 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!