undefined

இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  தரவரிசை பட்டியல் வெளியீடு!!

 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . அந்த வகையில் அரசு கலைக்கல்லூரிகளில் மே8 முதல் 22ம் தேதி வரை  இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 164 அரசு கலைக்கல்லூரிகளில்  மொத்தம் உள்ள  107395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில், அரசு கலைக்கல்லூர்களில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தரவரிசைப்பட்டியல் தமிழகத்தில் உள்ள அந்தந்த கல்லூர்களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான கலந்தாய்வு மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம்  தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது .  முதல்கட்ட  கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன்  மாதம் 22ம் தேதி தொடங்கப்படும் என கல்லூரி இயக்கம் அறிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்