undefined

 ரவி மோகன், கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம்! 

 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.   சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லனாக  நடித்து வருகிறார். 


ரவிமோகன்  சமீபகாலமாக மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இவர்களின் விவாகரத்து பிரச்சினையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்திருந்தார்.

இது  அவரது வாழ்வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?