ரீல்ஸ் மோகம்... நடுரோட்டில் பைக் பெட்ரோல் டேங்கில் மனைவிகளை அமர வைத்து அட்டகாசம்... வைரலாகும் வீடியோ!
ரீல்ஸ் மோகம்த்தால், திருத்தணியைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேர், தங்களது பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது தங்களது மனைவிகளை அமர வைத்து , நடுரோட்டில் வாகனத்தை வேகமாக இயக்கியப்படி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தது வெளியாகி, வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பலரையும் வாழ்க்கையை இழக்க செய்து வருகிறது. உயிரோடு விளையாடும் ஆபத்தை உணராமல் தங்களது வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், திருத்தணியில் இரு வாலிபர்கள் , ரீல்ஸ் மோகத்தால் தங்களது மனைவிகளை பைக்கின் பெட்ரோல் டேங் மீது அமர வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தங்கள் மனைவிகளை மோட்டார் சைக்கிளின் முன்பக்க பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து கொண்டு திருத்தணி- அரக்கோணம் புறவழிச் சாலையில் அதிவேகமாக சென்றபடியே ‘ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!