புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் வேணி மாரடைப்பால் காலமானார்!
சென்னையில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் வேணி. 71 வயதான இவர் சமீபத்தில் மறைந்த ‘ஐந்து ரூபாய் மருத்துவர்’ ஜெயச்சந்திரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் வேணி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்நாள் பரிசை தந்தவர். தனது கணவரின் மக்கள் சேவையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு எளிய செலவில் சிகிச்சை வழங்கியதும் இவரது சிறப்பாக கருதப்படுகிறது.
டாக்டர் வேணியின் திடீர் மரணம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமூகத்தில் பலருக்கு நம்பிக்கையான மருத்துவராக விளங்கிய இவர், கணவர் பாணியிலேயே மனிதநேய சிகிச்சையை வழங்கியவர் என மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!