undefined

நெகிழ்ச்சி வீடியோ... கர்ப்பிணி ஆசிரியரை 11 கி.மீ தூரம் பல்லக்கில் தூக்கி சென்ற மாணவர்கள்!  

 

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக அங்குள்ள பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் காணாமல் போவதற்கு வழிவகுத்தது. இந்த ஆபத்தான சூழ்நிலையில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை மீட்க முன் வந்துள்ளனர்.

அதாவது ஆபத்தான சூழ்நிலையில் இருந்து கர்ப்பிணி ஆசிரியர் கலை பாதுகாக்க முன்வந்த கல்லூரி மாணவர்கள் தற்காலிக பல்லக்கில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சிரமமான மலைப்பாதையில்  பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் இமாச்சலத்தின் துனாக் பகுதியில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனவியல் கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. அங்கு பணிபுரிந்த 2 கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு, மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவசர நடவடிக்கை தேவைப்பட்டது. வெள்ளப் பெருக்கு காரணமாக சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதனால் அவசர சேவைகள் அந்த இடத்தை அடைய முடியவில்லை.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் பிறர் ஆசிரியர்கள் இணைந்து ஜூலை 2 ம் தேதி அன்று பல்லக்குகளை வடிவம் வைத்து சீரான நிலம் இல்லாத பாதையில் சுமார் ஒரு 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அதில் இமாச்சலின் உண்மையான ஹீரோக்கள் மேக வெடிப்புக்கு பிறகு மாணவர்கள் தங்கள் கர்ப்பிணி பேராசிரியரை 11 கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பாக  அழைத்துச் சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?