இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்? தேர்தல் ஆணையம் திடீர் முடிவு!
இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்களது மாநிலங்களில் உள்ள மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர்பட்டியல் திருத்தம் நடைபெற்றது என்பது போன்ற தகவல்களை செப்டம்பர் 10ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைதேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அன்றைய தினம் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத்தேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைதேர்தல் ஆணையம் மேற்கொண்டது.அதில், 65 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!