undefined

படுத்துக்கொண்டே பைக்கை ஓட்டி சாகசம்.. பொது மக்களை அச்சுறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

 

முத்தரையர் சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்-சார்ட்டியூர் சாலையில் பிரகாஷ் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் படுத்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்டார்.

அதை வீடியோவாக எடுத்து அந்த வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைராலனதை தொடர்ந்து காவல்ர்கள் கவனத்திற்கு சென்றது. இதற்கு பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டு அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிரட்டியதாக புலிவலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் நிவேஷ் (19) மீது புலிவலம் போலீஸார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!