9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி... இன்று கோவை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி வழங்குகிறார்!
இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். கோவைக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடிக்கு மாநில கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
மாநாடு இன்று மதியம் 1.30 மணி தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையிலேயே பிஎம்-கிசான் திட்டத்தின் 21வது தவணையின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ₹18 ஆயிரம் கோடி நிதி வழங்குவார். இந்த உதவித்தொகை அவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ₹6 ஆயிரம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் 44,837 விவசாயிகள் இதன் பயன் பெற உள்ளனர்.
மேலும், மாநாட்டில் இயற்கை விவசாயத்தில் சாதனை விளக்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. பிரதமர் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிடும் அரங்குகளிலும் கலந்துரையாடுகிறார். அவர் விஞ்ஞானிகளுடனும் விவசாயிகளுடனும் நேரடியாக கலந்துரையாடுகிறார்.
மாநாடு முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மாநாட்டு கூட்டம் நடைபெறும் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க