undefined

ட்ரம்புடன் ரஷ்ய அதிபர் புதின் 3 மணி நேர பேச்சுவார்த்தை... உடன்பாடு எட்டப்படாத சோகம்!

 

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து  அலாஸ்காவில்  டிரம்ப் -  புதின் இடையே 3 மணி நேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து  இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அதில்  ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில்  உக்ரைன் - ரஷிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அதே நேரத்தில்  தனக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக புதின் கூறியுள்ளார்.  இந்த புதிய முன்னேற்றத்தை நாசமாக்க வேண்டாம் என ஐரோப்பாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

 

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரைவில் பேச திட்டமிட்டு இருப்பதாகவும், இங்கு நடந்த விவாதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்ததாகவும், பல முக்கிய விவகாரங்களை தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அதில் சில அவ்வளவு  முக்கியமானவை அல்ல. ஒரு சில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அவற்றை சரி செய்ய, மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது.  

1945க்கு  பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக உக்ரைன் - ரஷிய போர் நடந்து வருகிறது. தொடர்ந்து 3  ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த பயங்கர போரை முடிவுக்குக் கொண்டு வர உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?