இன்று சபரிமலை நடை திறப்பு... காலை முதலே குவிய தொடங்கிய பக்தர்கள்!

 

சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாசி  மாத பூஜைகளுக்காக இன்று ஐயப்பன் கோவில் நடை  திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு  பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மண்டல, மகரவிளக்கு சீசனில் சுமார் 52 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  இந்நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை  5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறக்கிறார்.  

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்து  ஜனவரி 21ம் தேதி நடை சாத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைகளுக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில்  மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிப்ரவரி 13ம் தேதி  செவ்வாய்க்கிழமை  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறக்கப்பட உள்ளது.  பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்கள் நெய் அபிஷேகம், படிபூஜை,  உதய அஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும்.

 இந்த நாட்களின் சாமி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன்  மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அங்கேயே, உடனடி முன்பதிவு முறையிலும் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவார்கள்.இத்தகவலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

திடீர் ராஜ யோகம்... இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது... 15 வருஷங்களுக்கு பின் ராகு புதன் சேர்க்கை!