undefined

விளையாட்டு பயிற்சியின் போது சோகம்.. தலையில் ஈட்டி பாய்ந்து பள்ளி மாணவன் மூளைச்சாவு!

 

வடலூர் தர்மா சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் வயது (15);. இவர் வடலூர் மார்க்கெட் தோப் பகுதியில் உள்ள தனியார் (சியோன் மெட்ரிக்) பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கிஷோர் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டு சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மாலை 5.30 மணியளவில் ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, ​​அங்கு நின்றிருந்த கிஷோரின் தலையில் ஈட்டி ஒன்று விழுந்தது. பலத்த காயமடைந்த மாணவர் கிஷோர், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், மேல் சிகிச்சைக்காக, சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அந்த மாணவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த தாய் சிவகாமி நேற்று காலை பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  பின்னர், மீட்கப்பட்ட அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில் மாணவர் கிஷோரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் செய்து வருகின்றனர்.விளையாட்டுப் பயிற்சியின் போது பள்ளி மாணவன் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி