undefined

ராதிகாவின் வெற்றிக்காக அங்கப் பிரதட்சணம் செய்த சரத்குமார்!

 

 

மக்களவைத் தொகுதியில் நாடு முழுவதும் பெருவாரியான இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் என்றும், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத என்பதே கருத்துக் கணிப்புகளில் வெளியான தகவலாக இருக்கிறது. 

இந்நிலையில், விருதுநகர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள தனது மனைவி நடிகை ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டார்.

 

விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்பி- மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிராபகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூரே மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் ராதிகாவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கைத் துவங்க உள்ள நிலையில், தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டியும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும், நடிகர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!