நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு... விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு: கடலோரத்தில் தீவிர கண்காணிப்பு!
நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர், தூத்துக்குடி போன்ற கடலோரத்திலும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அனல்மின்நிலையம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே வாகன தணிக்கைகள், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மக்கள் கூடும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 1000 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் கடலோர பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!