undefined

சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... சேலம் மாவட்ட நிர்வாகிகள் விலகல்!

 

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டு சுமார் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைப் பேச்சு பெரும் விவாதங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கூட அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். 

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், சேலம் மாநகர மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார் விலகியுள்ளார். சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!