சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்!! ஸ்டாலின் கடும் கண்டனம்!!
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ப்ளூடிக், மாத சந்தா என அடுத்தடுத்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பலருடைய ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக சர்ச்சைக்குரிய மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் ட்வீட் செய்பவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல, ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!