undefined

ரோடு ஷோ…  செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார்? கலக்கத்தில் தொண்டர்கள்! 

 


 
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சமீபகாலமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களை சந்தித்து சற்று நேரத்தில் செங்கோட்டையன் பேட்டி கொடுக்க இருக்கிறார். 

இந்நிலையில் செங்கோட்டையனை வரவேற்க கோபி அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் அவர் திடீரென திறந்த வெளி வாகனத்தில் ரோட் ஷோ நடத்தினார்.கோபியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை நீக்கிய  பெரியார் புகைப்படத்தை இணைத்துள்ளார். 

வழி நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி சத்திய பாமா செங்கோட்டையனுடன் இணைந்தார்.  மேலும் அவர் என்ன பேட்டி கொடுக்கப் போகிறார் என்ன சொல்லப் போகிறார் என்பது இன்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?