வைரல் வீடியோ!! ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை..பளார் விட்ட இளம்பெண்!!
கர்நாடகா மாநிலம் மாண்ட்யா மாவட்டத்தில் கே.ஆர். பீடே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டபோது, திடீரென இளம்பெண் ஒருவர் சத்தம்போட்டுள்ளார். அதோடு தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞருக்கு பளார் பளார் என அறை விட்டதால் சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் அந்த பயணியை சட்டையை பிடித்து இழுத்து பேருந்தை விட்டு வெளியே தள்ளினார். இதுதான் சரியான நேரம் என்று அந்தநபரும் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் பேருந்தில் இருந்தவர்கள், அந்த நபரை பிடித்துவைத்திருந்தால் போலீசில் ஒப்படைத்திருக்கலாம் என கூறினர்.
இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!