இன்று துன்பங்களைப் போக்கி வெற்றி தரும் சஷ்டி விரதம்.. எப்படி இருந்தால் முழு பலன்?!

 

துன்பங்களைப் போக்கி, நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை நீக்கி, கவசமாக இருந்து பாதுகாத்து வெற்றியைத் தரும் சஷ்டி விரதம் இன்று. மாதம் தோறும் சஷ்டி வந்தாலும் முருகனுக்கு  உகந்த வைகாசியில் வருகிற சஷ்டிக்கு விசேஷம் உண்டு.

சஷ்டிக்கு ஆறு நாட்களும் தொடர்ந்து விரதமிருப்பவர்கள் பலர். இயலாதவர்கள் இன்று ஒரு நாளாவது முழு நேரமும் விரதம் இருந்து மாலை நேரத்தில் ஆலயங்களில் நடைபெறும் விழாவை கண்டுகளித்து விரதம் முடிப்பர்.

இந்த நாளில் மௌன விரதம் அனுஷ்டிப்பதால் முருகனிடம் நாம் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பக்தர்களின் நம்பிக்கை. இன்றைய தினம் அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் வழக்கமான பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயம் சென்று முருகன் சன்னிதியை வலம் வந்து வணங்குவது சிறப்பு.

இன்றைய நாள் முழுவதுமே எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம், நீர் ஆகாரங்களை அருந்தலாம். நாள் முழுவதுமே கந்தர் அனுபூதி, திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் , கந்தபுராணம் படிக்கலாம் .

பகலில் உறங்காமல் வீட்டிலேயே முருகனுக்கு ஆறு கால பூஜை செய்யலாம். உடல் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் முருகன் துதிகளை பாராயணம் செய்வது நல்லது. தியானம், ஜெபம் செய்யலாம். ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வை கண்டு களித்து பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் விரதத்தை நிறைவு செய்யலாம்.

சூரபத்மனை சம்ஹாரம் செய்வது போல் நம் மனதில் உள்ள பொறாமை, வஞ்சகம் , சஞ்சலங்களை சம்ஹாரம் செய்து அவன் தாள் பணிவோம். முருகன் அருள் பெறுவோம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்