அதிர்ச்சி... குப்பை லாரி ஏறியதில் 8 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழப்பு!

 

சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த துயரச்சம்பவத்தில் 8 வயது சிறுமி குப்பை லாரி மோதி உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களையும், உறவினர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் எடுத்துச் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தவறால் இந்த துயரம் நடந்துள்ளது.

கைலாசம் தெருவைச் சேர்ந்த சரளாவின் மகள் காவியா (8), தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். சரளாவின் உறவினர் 15 வயது சிறுமி, அடிக்கடி உதவி செய்வதற்காக பைக்கில் காவியாவை அழைத்துச் செல்கின்றார். நேற்று ஆக்டிவாவில் கேஸ் சிலிண்டர் வைத்துக்கொண்டு புறப்பட்டு சென்ற அவர்கள் திடீரென சிலிண்டர் கீழே விழுந்ததால் வாகனத்தை நிறுத்தினர்.

அத்துடன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த காவியா சமநிலையை இழந்து வலது பக்கம் சாலைக்குச் கீழே விழுந்தார். அதே நேரத்தில் பின்னால் வந்த குப்பை லாரியின் பின் சக்கரம் சிறுமியின் தலையில் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து லாரி ஓட்டுநர் சரண்ராஜை தாக்கினர். பின்னர் விரைந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் லாரி ஓட்டுநரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை தொடங்கினர். காவியாவின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போக்குவரத்து இணை ஆணையர் சோனல் சந்திரா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தையும், குழந்தைகளின் சாலை பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ள இந்த நிகழ்வு, பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கும் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க