ரயில் சக்கரங்களுக்கிடையே   அமர்ந்து 100 கி.மீ பயணம் செய்த சிறுவன்... பகீர் வீடியோ ! 

 

சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோமீட்டர் பயணம் செய்த சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்து, உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஆலம்நகர் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் அருகே ரெய்லே தண்டவாளம் அருகே வசிக்கும் சிறுவன் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது, யாருக்கும் தெரியாமல் இருக்க, நிறுத்தப்பட்ட சரக்கு ரயிலில் ஏறி தலைமறைவானார். ஆனால், ரயில் வேகமாக நகர ஆரம்பித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கீழே இறங்க முடியாமல் திகைத்து நிற்கிறான். இதையடுத்து, சரக்கு ரயிலின் டயர்களுக்கு இடையே அழுது கொண்டே பயணம் செய்தார்.

இதற்கிடையில் சரக்கு ரயில் ஹர்தோய் ரயில் நிலையத்தை அடைந்தபோது, வழக்கமான சோதனையில் சிறுவனைக் கண்டு ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இது குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, ஹர்தோய் ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்கப்பட்டான். ரயில்வே பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டான். மேலும், அந்த வீடியோவில் சிறுவனின் உடல் முழுவதும் தூசிப்படிந்து காணப்பட்டது. அஜய் என அடையாளம் காணப்பட்ட சிறுவன் குளித்துவிட்டு உணவளிக்கப்பட்டான். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவின் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் அஜய், குழந்தைகள் உதவி மைய ஊழியர்கள் உதவியுடன் குழந்தைகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். சிறுவன் விரைவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!