காஷ்மீர் ரோந்து பணியின் போது ஷாக்.. பாகிஸ்தான், சீனாவை சேர்ந்த ஆயுதங்கள் பறிமுதல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜுல்லாஸ் பகுதியில் இந்திய ராணுவத்தின் ரோமியோ படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரின் பை ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதிலிருந்து ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானின் கைத்துப்பாக்கி குண்டுகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், அதிக சக்தி கொண்ட அடுப்பு குண்டுகள், மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தன. இந்த வெடிமருந்துகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும், பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையும் நடக்க வாய்ப்பில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினரின் தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!