undefined

அதிர்ச்சி... சடலத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது... உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 
சதீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம், 9 வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கில், சடலத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது என பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சதீஸ்கர் மாநிலம், கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018ல் 9 வயதுடைய தலித் சிறுமி ஒருவர் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். 

இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சிறுமி உயிரிழந்த நிலையிலும் பலமுறை சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் நீல்காந்த் போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீல்காந்த்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

நீல்காந்த் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, பிபு தத்தா குரு ஆகியோர், போக்சோ அல்லது பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது நெக்ரோபிலியா என்பதாகும். பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால், அதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு என நீதிபதிகள் தெரிவித்தனர். 

சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!