தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மடத்தூர் - சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்தில் அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெரு, ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன் @ மண்ணென்னை ஹரி (54), மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மடத்தூர், ஈபி காலனி 2வது தெரு வேல்சாமி ரவிக்குமார் (53), வண்ணார் 1 வது தெரு ஹரி கிருஷ்ணன் மகன் சந்திரசேகர் (28) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க