காலையிலேயே அதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 14 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இவர்கள் படகுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்து, காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நவம்பர் 3ம் தேதி மட்டுமே 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் 14 பேர் கூடுதல் கைது செய்யப்பட்டிருப்பது கடலோர பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசும் மீனவர் சங்கங்களும் பலமுறை மத்திய அரசின் தலையீட்டை கோரியுள்ளன. இருந்தாலும், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படாததால் மீனவர்களிடையே கவலை நீடிக்கிறது.

மீனவர் அமைப்புகள், மீனவர்கள் பாதுகாப்புக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!