திருச்சியில் அதிர்ச்சி.... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது!
திருச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியரைப் போலீசார் போக்சோவில் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்தவர் தமிழ் (52). இவர் திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13ம் தேதி அதே கல்லூரியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் அவர் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி, கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மணிகண்டம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த புகாரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கல்லூரி துணை முதல்வர், வகுப்பு பேராசிரியர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மாணவி தரப்பில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!