அதிர்ச்சி... கொல்கத்தா கிளம்பும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பயணிகள் இறக்கப்பட்டு தீவிர சோதனை!
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இன்று காலை 8.30 மணிக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய 182 பயணிகள் சோதனைகள் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கால் சென்டருக்கு மர்ம ஆசாமி தொலைபேசியில் கொல்கத்தா செல்லும் விமானத்தில் குண்டு வெடிக்கும் என கூறி தொடர்பை துண்டித்து விட்டான்.
உடனே விமானத்தில் ஏறிய 182பயணிகளும் கீழே இறக்கப்பட்டு ஒய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானத்தில் ஏறி முழுமையாக சோதனை பணி நடந்து வருகிறது. மீண்டும் காலை 11 மணிக்கு விமானம் கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!