அதிர்ச்சி... நடுரோட்டில் பாமக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிக், குடிநீர் சப்ளை உள்ள தொழில்களில் ஏ.வாசு ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பாமக நிர்வாகி ஏ.வாசு நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இளந்தோப்பு பகுதியில் லாரியில் தண்ணீர் நிரப்ப வந்தபோது வாசுவை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளது. இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாசுவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!