undefined

அதிர்ச்சி... பிரபல தமிழ்பட நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 

நடிகை சுனைனா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சுனைனா, அந்த படத்தின் மூலமாகவே ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதன் பின்னர் நீர்ப்பறவை, லத்தி போன்ற படங்களில் நடித்து வந்தார்.



அண்மையில் வெளியான 'ரெஜினா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை சுனைனா. இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் நடிகை சுனேனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தனது இன்ஸ்டாவில், நடிகை சுனைனாவுக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியூப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்? என்னாச்சு? என்கிற தகவலை நடிகை சுனைனா வெளியிடவில்லை. நடிகை சுனைனா விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் எழுதி வருகின்றனர். எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். விரைவில் மீண்டு வருவேன் என்று அந்த புகைப்படத்தின் கீழ் பகிர்ந்துள்ளார் சுனைனா. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!