undefined

அதிர்ச்சி... டிஜிட்டல் கைதில் ரூ.4 கோடி மோசடி... பாஜக பிரமுகர் கைது... சீன கும்பலின் முகவர் வங்காளத்தில் பிடிபட்டார்!

 

டிஜிட்டல் அரெஸ்ட் (போலி மெய்நிகர் கைது) மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சீன கும்பலின் முக்கிய ஏஜென்டுகளில் ஒருவரை கொச்சி சைபர் க்ரைம் போலீசார் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவரும், பாஜக உள்ளூர் தலைவருமான லிங்கன் பிஸ்வாஸ் (27) கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் வாழைக்காலையை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாஜக உள்ளூர் தலைவரைக் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த மிஷாப் மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது முஃபாசில் ஆகியோர் முன்பு டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கொச்சி போலீஸ் குழுவினர் மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைந்து சென்று லிங்கனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகஞ்சில் உள்ளூர் பாஜக தலைவர் ஆதரவுடன் இருந்த லிங்கன் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பிஸ்வாஸை கைது செய்ய கொச்சி போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியையும் நாடியுள்ளனர். 

நேற்றிரவு கைது செய்யப்பட்டவரை கொச்சிக்கு அழைத்து வந்தனர். மோசடி குழுவினர் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் டெல்லி போலீசார் என்று கூறி, ஒரு தனியார் வங்கியின் டெல்லி கிளையில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் வங்கி கணக்கு இருப்பதாகவும், அதை பயன்படுத்தி சந்தீப் குமார் என்ற நபர் நிதி மோசடி செய்ததாகவும் நம்ப வைத்துள்ளனர். அதன் பின்னர் ஜோசப் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

ஜோசப்பின் வங்கி கணக்குகளில் உள்ள பணம் முறையானதா என்பதை உறுதிப்படுத்த, பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுமாறு மோசடி குழுவினர் மிரட்டியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜோசப்  பெட்டி தனது பெயரில் உள்ள மூன்று வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.1 கோடியை மோசடி செய்தவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். 

தன்னுடைய பணத்தை திரும்பப் பெறாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப் இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.  பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை சரி பார்த்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். திருடப்பட்ட பணம் 450க்கும் மேற்பட்ட கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் விரிவாகச் சரிபார்த்த பிறகு லிங்கன் பிஸ்வாஸை போலீசார் நெருங்கினர். இந்த வழக்கு முடிந்ததும் ஜோசப்பிடம் பணம் திருப்பித் தரப்படும் என்று கூறப்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!