அதிர்ச்சி... பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!
உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் நகரத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ககன்சிங். இவர் 9ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மாணவன் டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்துள்ளார். ககன்சிங் பாடம் நடத்தி கொண்டிருந்த போது அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டார்.
சக மாணவர்கள் கத்தி கூச்சலிட்டதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!