அதிர்ச்சி... தகராறை தடுத்து நிறுத்த முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை!
அரியானாவில், வீட்டு முன் ஏற்பட்ட தகராறை சமரசப்படுத்த முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் மர்மக்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ் குமார் (57), தனிஷ்யாம் லால் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு அவரது வீட்டு அருகே இரண்டு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை கண்டு தகராறை தடுக்க ரமேஷ் குமார் சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினரும் அவரை தள்ளி வாக்குவாதத்தில் இழுத்துக்கொண்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிலர் செங்கல் மற்றும் உருட்டுக் கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். கடுமையாக காயமடைந்த ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இன்னும் ஐந்து பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு அதிகாரி இந்த விதமாக உயிரிழந்தது உள்ளூர் மக்களிடையே துயரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க