undefined

 

அதிர்ச்சி... தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. கால்கள் பிய்ந்து குழந்தை பலியான சோகம்!

 
பெரும் அதிர்ச்சியாக செவிலியர் ஒருவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்த நிலையில், பிரசவ வலியின் போது, குழந்தையின் கால்களை பிடித்து வெளியே இழுத்ததில், செவிலியரின் கையோடு குழந்தையின் கால்கள் தனியே பிய்ந்து வந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா(24). சென்னை தி. நகர் சவுத்போக் ரோட்டில் தங்கியிருந்த கடந்த ஒரு வருட காலமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வினிஷா செவிலியராக பணியாற்றி வருகிறார். வினிஷாவிற்கும் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் மதுரையைச் சேர்ந்த செல்வமணி (29) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும்  அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், காதலனுடனான நெருக்கம் காரணமாக கருத்தரித்த வினிஷா, ஏழு மாத கர்ப்பிணியாக தனியே சிரமப்பட்டு வந்துள்ளார். நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வினிஷா, செவிலியர் என்பதால், தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொள்ளும் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி தனியே குளியலறைக்குள் சென்று பிரசவத்திற்காக முயற்சி செய்துள்ளார். 

பிரசவத்தின் போது, பிரசவ வலியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், ஆக்ரோஷமாக சிசுவை வெளியே இழுக்க முயற்சித்துள்ளார். கையில் தட்டுப்பட்ட குழந்தையின் கால்களைப் பிடித்து இழுத்ததில், குழந்தையின் கால்கள் தனியே பிய்த்துக்கொண்டு வெளியே வர, குழந்தையும் இறந்தே பிறந்தது. பின்னர் குழந்தையின் கால்களை கழிவறையில் வீசிவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு வினிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்திருப்பதை உறுதி செய்தனர். அதன் சடலத்தை பத்திரப்படுத்தியவர்கள், வினிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீசார் வினிஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் இதுவரை வினிஷாவை வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!