undefined

மதுரையில் அதிர்ச்சி.. இளைஞர் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு!

 

மதுரை மாவட்டம் மேலுார் அருகே கிழவளவு கிராமத்தில் நள்ளிரவில் நவீன்குமார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டதில் கார் அருகே நின்றிருந்த நவீன்குமார் படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த நவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வெடிகுண்டு சம்பவத்தின் போது நவீன்குமார் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிபன் பாக்ஸ் வெடிகுண்டின் டெட்டனேட்டர்கள் குறித்து கீழக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக நவீன்குமார் மீது  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் பணியாற்றியபோது, மற்றொரு குழுவுடன் ஏற்பட்ட தகராறில், நவின்குமார் மீது  வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!