அதிர்ச்சி வீடியோ.. கழிவறைக்குள் பதுங்கி இருந்த பாம்பு.. அசால்ட்டாக தூக்கி வீசிய இளம்பெண்!
தனது வீட்டின் கழிவறைக்குள் பதுங்கி இருந்த பாம்பை, அசால்டாக இளம்பெண் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் அப்புறப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், அஹில்யா நகரைச் சேர்ந்த சர்ப்மித்ரா சிடல்காரா என்கிற சிட்டு இவர் பாம்பு பிடிப்பவர். இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் வைரலாக வலம் வருபவர். அவர் பிடிக்கும் பாம்புகள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் விஷமற்ற பாம்பு புகுந்தது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சர்ப்மித்ராவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் விரைந்த அந்த பெண், விஷமற்ற பாம்பு கழிவறைக்குள் இருப்பதை உறுதி செய்ய முயன்றார். அப்போது பாம்பை கையில் எடுத்த பெண், எந்த சலனமும் இன்றி, தான் கொண்டு வந்திருந்த கைப்பையில் வைத்து பாதுகாப்பாக எடுத்துச்சென்று காட்டில் விட்டார்.
அந்தப் பெண் பாம்பை கைகளால் தூக்கிச் செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் அது பாம்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் முகத்தில் வினோதமான பாவனைகளைக் காட்டினர். சிட்டு பாம்பு என்பது நீர்வாழ் பாம்பு. இது விஷமற்ற பாம்பு எலி, தவளைகளைப் பிடித்து சாப்பிட்டு உயிர் வாழும் என்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!