அதிர்ச்சி... சாத்தனூர் அணையில் முதலை கடித்து இளைஞர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணையில் முகம் கழுவ சென்ற இளைஞர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் முகம் கழுவ முனீஸ் சென்றுள்ளார். அப்போது, நீரில் பதுங்கி இருந்த முதலை இளைஞர் முனீசை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது.
இந்த சம்பவத்தில் முனீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முனீசை மீட்க அவரது நண்பர்கள் முயற்சித்தபோதும் அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் முனீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!