undefined

 நகைக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி தகவல்... வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!

 

 இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரிடையே தங்கத்தில் முதலீடு என்பது பெரும் சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது.  தங்கம் அணிவது சமூகத்தில் பெரும் மதிப்பாக மட்டுமின்றி   நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடிவதால் இதன் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனாலேயே  தங்கத்தின் பேரில்  வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உடனடி கடன்களை தருவதுண்டு.  


வங்கியில் நகைக்கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை செலுத்த  முடியாதபட்சத்தில், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க அதனை புதுப்பிப்பது வழக்கம். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பெற்ற நகைக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதையும், கடன் முடிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என  வங்கிகள் தங்கள் கிளை வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன் கடனை புதுப்பிக்கவோ அல்லது மேம்படுத்தப்படவோ அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளன. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!