அதிர்ச்சி வீடியோ... கோவில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை... 17 பேர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம்!!
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மலப்புரத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததாகத் தெரிகிறது. மதம் பிடித்த யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
யானை தும்பிக்கையால் பக்தர் ஒருவரை தூக்கி வீசியதில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!