அதிர்ச்சி வீடியோ... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து... 22 பேர் பலியான சோகம்!
தூக்க கலக்கத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுநர், கண்ணயர்ந்த நேரத்தில் பாலத்தின் தடுப்பு சுவரை மோதி, உடைத்துக் கொண்டு, 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து பேருந்து பெரும் விபத்துக்குள்ளானது. ஆற்றில் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையில், இந்த படுபயங்கர விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த பேருந்து இந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தலைக்குப்புற விழுந்து கிடந்த பேருந்தை உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து நிமிர்த்தி வைத்தனர். பேருந்தின் சக்கரத்தில் ஓட்டுநர் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் உடனடி நிவாரணமாகவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000, சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியும் உடனடியாக வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!