நடுரோட்டில் சண்டை, கொலை மிரட்டல்...  எஸ்ஐ, பெண் காவலர் இருவரும் சஸ்பெண்ட்! 

 
 


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் 36 வயது செல்வகுமார்.  அதே பிரிவில் இந்திராகாந்தி காவலராக வேலைபார்த்து வந்தார். இருவரும் ஆகஸ்ட் 17ம் தேதி  நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். 

இதனையடுத்து  போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யபப்பட்டனர்.

இந்நிலையில்  காவலர் இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதேபோல, காவல்துறையின் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திராகாந்தியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?