வெறிநாய் கடித்து சிறுமி உட்பட 6 பேர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் சமீப காலங்களாக வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று வெறிநாய் கடித்து ஒரு சிறுமி, 3 பெண்கள், 2 முதியவர்கள் என 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெறிநாய் கடித்து காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!