undefined

பயனர்களே உஷார்... 3 ஆண்டுகள்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாவிட்டால் தனிப்பட்ட தகவல் நீக்கம் ! 

 

மக்களை உலகளவில் இணைக்கும் முக்கிய தளங்களாக சமூக வலைத்தளங்கள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தகவல் பரிமாற்றம், கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரே நோக்கமுடையவர்களை இணைப்பதிலும், வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றடைவதிலும் இவை பலத்த கருவியாக திகழ்கின்றன. அதேசமயம், நேர விரயம், தவறான தகவல்கள் பரவல், மன அழுத்தம் போன்ற பாதகங்கள் பற்றியும் பயனர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், குடிமக்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. இதன் படி, சமூக வலைத்தளங்கள், இ–காமர்ஸ், ஆன்லைன் கேமிங் தளங்கள் போன்ற நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளாக கணக்கை பயன்படுத்தாத பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கட்டாயம் நீக்க வேண்டும். தகவல் நீக்கத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனரின் ஒப்புதலின்றி தொலைபேசி எண்கள் கசிந்து ஸ்பேம் அழைப்புகள் செல்லும் சூழலில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்களை பொது நலன் கருதி வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 2027 மே மாதம் வரை மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு நவம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதனால் மக்களுக்கு தங்கள் தரவின் மீதான கட்டுப்பாடு மேலும் வலுப்பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!